சுடச் சுடச் செய்திகள்

‘பெட்டகப் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பேற்காது’

புதுடெல்லி: பெட்டகங்களில் வாடிக்கையாளர்கள் வைக்கும் பொருட்கள் சேதமடைந்தாலோ அல்லது திருட்டு போனாலோ அதற்கு வங்கி பொறுப்பு ஏற்காது என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது. “எதற்கும் பொறுப்பேற்காத வங்கிகளிடம் நம் பொருட்களையும் கொடுத்து அதனைப் பாதுகாக்க பணமும் ஏன் கொடுக்கவேண்டும்,” என்று மக்கள் இப்போது கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கிகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் நகைகள், முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் போன்ற வற்றை வைத்தால் அவை பாது காப்பாக இருக்கும் என்றும் ஒரு வேளை அவை திருட்டு போய் விட்டால் வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக் கொண் டுள்ளனர். ஆனால் அது உண்மை அல்ல. வங்கிகள் அதற்கு பொறுப் பேற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும் 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பொருட் களைப் பாதுகாக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் துறப் பதையே அது சுட்டிக்காட்டி உள்ளது. வங்கிகளும் பெட்டகங்களில் வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூ லித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வங்கிகளில் வைக்கப்படும் பொருட்கள் தொடர்பான தனது சந்தேகங்களை ஆர்டிஐ மூலம் ஆர்பிஐ உட்பட 19 வங்கிகளிடம் கேட்டார். அதற்கு வங்கிகள் அளித்துள்ள பதில் அதிரச் செய்துள்ளது. வங்கி பெட்டகங்களில் வாடிக்கையாளர்கள் வைக்கும் நகை உட்பட எந்தப் பொருட் களுக்கும் வங்கி பொறுப்பாகாது.

நகைகளோ அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட இதர பொருட்களோ காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கு வங்கி கள் இழப்பீடு வழங்காது. பெட்ட கங்களில் வைக்கப்படும் பொருட் களுக்கு வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன. வங்கிகள் பொறுப்பேற்காத போது வாடிக்கையாளர்கள் தங்க ளின் பொருட்களை ஏன் வங்கி களில் வைக்கவேண்டும். வீட் டிலேயே வைத்துக்கொள்ளலாமே என்றும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.