சமையல்காரர் வேலைக்குப் பொறியாளர்கள் போட்டா போட்டி

பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பில் முனைப்புக் காட்டி வருவதால் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆகையால், எந்த மாதிரியான அரசு வேலை என்றாலும் சரி, அதைக் கைப்பற்ற படித்தவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. முதுகலை, பொறியியல், எம்பிஏ படித்தவர்கள்கூட சமையல்காரர், பாதுகாவலர் போன்ற வேலைகளைச் செய்ய தயாராக உள்ளனர். அண்மையில் கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் விடுதிகளில் சமையல்காரர்கள், பாதுகாவலர்கள் பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியானது.

இதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் பெரும் பாலானவர்கள் தேவைக்கு அதிகமான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் எனக் கூறப்பட்டது. மைசூரு மாவட்டத்தில் மட்டும் 70%க்கு மேலான விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள் அல்லது முதுகலைப் பட்டதாரிகள். பொறியாளர்களும் எம்பிஏ பட்டம் பெற்றவர்களும் அவர்களுள் அடங்குவர். அந்த வேலைகளுக்கு அடிப்படைத் தகுதி, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதுடெல்லியில் உள்ள
லோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ

09 Dec 2019

தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து