2018லிருந்து நிதியாண்டை மாற்றியமைக்க இந்தியா திட்டம்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் இருந்து இந்திய நிதியாண்டு மாற்றம் காணலாம். ஏப்ரல்=மார்ச் என்று 150 ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை ஜனவரி= டிசம்பர் என்று மாற்ற இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த வரவு=செலவுத் திட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் தாக்கலாகலாம் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியப் பிரதமர் நிதியாண்டு கணக்கீட்டை மாற்ற வேண்டும் என்று கூறிய நிலையில், இந்தியா வின் நிதியாண்டை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளிலிருந்து தொடங்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே, காலங்காலமாக பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் தாக்கல் செய் யப்பட்டு வந்த வரவு-செலவுத் திட்டம் தற்பொழுது பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. புதிய நிதியாண்டு ஜனவரியில் தொடங்க வேண்டுமெனில் நாடா ளுமன்றத்தின் வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடர் டிசம்பர் மாதத்திற்கு முன்னரே தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கினால்தான் வரவு=செலவுத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் ஆண்டிறுதிக்குள் முடிவுறும். வரவு=செலவுத் திட்டம் தொடர் பான நடவடிக்கைகள், விவாதங் கள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுற வேண்டுமானால் நாடாளு மன்றக் கூட்டம் நவம்பர் மாத முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்திய நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுறும் இப் போதைய நடைமுறை, பிரிட்டிஷ் நிதியாண்டை ஒட்டி இருக்கும் வகையில் 1867ஆம் ஆண்டு அறிமுகமானது.