சுடச் சுடச் செய்திகள்

அதிமுகவை ஆட்டுவிக்கிறது பாஜக: டி.ராஜா குற்றச்சாட்டு

கும்பகோணம்: தமிழக அரசு பாரதிய ஜனதாவைக் கண்டு அஞ்சாமல் முக்கிய முடிவுகளை எடுத்து ஆக்கப்பூர்வமாகச் செயல் பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை பாஜக நினைத்தபடி ஆட்டுவித்து, பிளவுபடுத்தி வருகிறது என குற்றம்சாட்டினார். “அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசின் அழுத்தமும் ஆதிக்கமும்தான் காரணம். அதிமுகவைத் தன் வசப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது,” என்றார் டி.ராஜா.

மத்திய அரசை எதிர்க்கும் திறனை தமிழக அரசு இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தமிழக அரசு தயங்கவோ, அஞ்சவோ கூடாது என்றார். “விவசாயிகள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தேசிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். விவசாயிகள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க் வேண்டும்,” என்றும் டி. ராஜா தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon