அதிருப்தி எதிரொலி: காங்கிரசில் இருந்து குஷ்பு விலகுவதாக தகவல்

சென்னை: கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படாததால் காங்கிரசை விட்டு விலக நடிகை குஷ்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இருந்து விலகிய பின்னர் காங்கிரசில் இணைந்த குஷ்புவுக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அண்மைக் காலமாக கட்சி மேலிடமும் மாநிலத் தலைமையும் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், காங்கிரசை விட்டு விலக உள்ளதாகவும் அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.