சுவாதி கொலை: நிலைகுலைந்து போன ராம்குமார் குடும்பம்

மதுரை: இளம்பெண் சுவாதி படுகொலைச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு முடிந்த நிலையில், அச்சம்பவத்தில் ராம்குமாருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என அவனது பெற்றோர் கூறியுள் ளனர். தங்கள் மகன் மீது விழுந்த அபாண்ட பழி காரணமாக, தங்களது இரு மகள்களும் நிலைகுலைந்து போயிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். “மகன் இறந்த பிறகு என் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. என் மகள்கள் படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார்கள். மொத்தத்தில் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது,” என ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.