விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

கோவை: பேரிடர் சமயங்களில் எவ்வாறு துரித கதியில் செயல்பட வேண்டும் என்பது தொடர்பிலான ஒத்திகை ஒன்று நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்தில் நடத்தப் பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரிடர் மேலாண்மை தொடர் பாக பல்வேறு துறையினருக்கும் தொடர் பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் கோவை விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப் போக்கு வரத்து ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய ஒத்திகை நடைபெற வேண்டியது அவசியம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒத்தி கையில் விமான நிலைய ஊழியர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு ஆகியவற்றின் ஊழியர்கள் என 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கோவை விமான நிலையத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒத்திகையின் போது காயமடைந்ததாக கருதப்பட்டவர்கள் கீழே படுத்துக் கிடக்கும் காட்சி இது. படம்: தகவல் ஊடகம்