போதைப் புகையிலை ஊழல்: அமைச்சர், அதிகாரிகள் ‘கொலைக் குற்றவாளிகள்’ என எதிர்த்தரப்பு புகார்

தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான அளவிற்கு போதைப் புகையிலை ஊழல் நடந்திருப்பதாகவும் அதில் தமிழக சுகாதார அமைச்சரும் உயர் போலிஸ் அதிகாரிகளும் இதர நிர்வாக அதிகாரிகளும் சம் பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் புகார் கிளம்பி இருக்கிறது. இதனையடுத்து, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ் கரையும் இதர அதிகாரிகளையும் ‘கொலைக் குற்றவாளிகள்’ என்று வர்ணித்து அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன.

தமிழகத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையை யடுத்து இந்த ஊழல் பற்றி தெரியவந்தது. தமிழக தலைநகர் சென்னையில் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களைச் சட்ட விரோதமாக விற்பனை செய்ய அமைச்சருக்கும் சென்னை போலிஸ் ஆணையருக்கும் அவருடைய உதவியாளர் களுக்கும் கோடானுகோடி பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக் கிறது என்பது வருமான வரித் துறை சோதனைகள் மூலம் தெரிய வந்ததாக தகவல்கள் கசிந்தன.

இத்தகைய போதைப்பொரு ளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் பணத்தை அதிகாரிகளுக்கு கொடுத்திருப்பதாக வருமான வரித்துறை அறிக்கையை கோடி காட்டி செய்திகள் அம்பலமாயின. தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் போதைப் புகையிலையைச் சட்ட விரோதமாக விற்பனை செய்ய தங்களை அனு மதிக்குமாறு கேட்டு நிறுவனங்கள் அமைச்சர்களையும் அதிகாரிகளை யும் அணுகியதாகவும் அதற்கு அவர்கள் செவிசாய்த்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

சென்னையில் அண்மையில் அதிகாரிகள் பான்மசாலா, குட்கா கிடங்கு ஒன்றில் சோதனையிட்டு ஏராளமான பொருட்களைக் கைப்பற்றினார்கள். படம்: தமிழக ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு