சுடச் சுடச் செய்திகள்

சசிகலா குடும்பத்தாரை ஒதுக்குக: பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்து

சென்னை: சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட மாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இவ்விவகாரத் தில் முதல்வர் தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்றார். காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் வேளையில், அதிமுக வில் நிலவும் குழப்பங்களும் உட்கட்சிப் பூசலும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும் பத்தாரை அதிமுகவை விட்டு ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே அந்நிபந்தனை யாகும்.

“முதல்வர் பழனிசாமி தனது மவுனத்தைக் கலைத்து தெளிவாக அறிவித்தால் இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியம் உள்ளது. அதிபர் தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் எனப் பலரும் நினைக்கிறார்கள். நாங்களும் அவ்வாறே நினைக்கிறோம்,” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு விரைவில் வர உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று முடிவு வந்தால் தமிழக அரசியல் சூழ்நிலை மிக வேகமாக மாறும் என்றார். “ஜிஎஸ்டியை வரவேற்கிறேன். வரிகளை மாற்ற மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி.யால் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது,” என்றும் பாண்டியராஜன் மேலும் கூறினார்.

இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடா ளுன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்ஜிஆர். உருவாக்கிய கட்சி மற்றும் ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். “எம்ஜிஆர், ஜெயலலிதா இல் லாத நிலையில் சில சோதனை களைச் சந்தித்து வருகிறோம். அதில் நாம் வெற்றிபெற வேண்டும். தமிழக உரிமைகளைக் காக்க நாம் ஒன்றுபட வேண்டும்,” என்றார் தம்பிதுரை. ஜெயலலிதா விருப்பத்தின்படியே நடப்பு அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் மட்டுமே தமிழக அரசின் குறிக்கோள் என்றார். இரு அணிகளின் இணைப்புக் காக அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தைக் குழு கலைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon