ஆட்டோ மீது மோதிய பள்ளிப் பேருந்து: சிறுமி உட்பட 4 பேர் பலி

சென்னை: ஆட்டோ மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்குமார் என்பவர், மனைவி, மகள், உறவினர்கள் நால்வருடன் ஆட்டோவில் தேனி சென்றார். பெரியகுளம் கூட்டுறவுப் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பள்ளி வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் செந்தில்குமாரின் மனைவி, மகள், உறவுப் பெண், அவரது மகன் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.