கல்பாக்கத்தில் உலகின் அதிவேக அணு உலை; ரஷ்யாவை அடுத்து இந்தியா சாதனை

சென்னை: தமிழகத்தின் கல்பாக் கம் பகுதியில் அமைந்துள்ள அணு உலையில் இந்திய விஞ் ஞானிகளின் கடும் உழைப்பின் பலனாக உலகின் மிகப் பெரிய, அதிவேக அணு உலை உருவாக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பணி சத்தமின்றி நடந்து வந்துள்ளது. புராணக் கதைகளில் வரும் ‘அட்சயப் பாத்திரம்’ போல் இந்த அணு உலை செயல்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது ரஷ்யாவில் மட்டுமே உலகின் அதிவேக அணு உலை உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இது வணிக ரீதியில் செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவுக்கு அடுத்தபடி யாக இந்தியாவும் இச்சாதனை புரிந்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள் உரு வாக்கி உள்ள புதிய அணு உலை யானது, தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய அணு உலைகளைக் காட்டிலும் 70 விழுக்காடு அதிக சக்தி தரக்கூடியவை. மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய அணு உலையால் கதிர் வீச்சு தன்மை கொண்ட கழிவுகளின் அளவும் வெகுவாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

கடந்த 27 ஆண்டுகளாக புதிய வகை அதிவேக அணு உலை தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டி ருந்தனர். அதன் பலனாக சிறிய வகை அணு உலை ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது ஆய் வின் முடிவில் ‘ப்ரோட்டோ டைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்’ எனப் படும் பிரம்மாண்ட அணு உலை உருவாக்கப்பட்டுள்ளது. “புதிய வகை அணு உலையின் செயல்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு வெகுவாக கைகொடுக்கும்,” என்று இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.