தமிழ்நாட்டில் 1,100 திரையரங்கு மூடல்

இந்தியாவில் வரலாற்று முக்கிய ஜிஎஸ்டி (சரக்கு, சேவை வரி) வரி ஜூலை 1 முதல் அமல் படுத்தப்பட்டதையடுத்து அந்த வரியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் குழப்பம் நில வியது. போராட்டம் வெடித்தது. தமிழ்நாட்டில் எட்டு ரூபாய்க்கு விற்ற டீ விலை ஜிஎஸ்டி வரி காரணமாக 10 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இட்லி, வடை, தோசை உள் ளிட்ட எல்லா வகை உணவின் விலையையும் உணவகங்கள் திடீரென்று ஏற்றிவிட்டதாக எங் கும் பேச்சு அடிபடுகிறது. பிரியாணி விலை எகிறி உள்ளதால் ஒரு குடும்பத்தின ருக்கு ரூ. 567 வரி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாக ஒரு கணக்கீடு தெரிவித் துள்ளது.

இந்நிலையில், தமிழ் நாட்டில் உள்ள ஏறக்குறைய 1,100 திரையரங்க உரிமையாளர் கள் இன்று முதல் காலவரம் பில்லாமல் கதவுகளை இழுத்து மூடப்போவதாக தடாலடியாக அறிவித்து இருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி அமலானதும் 18% வரி காரணமாக திரைப்பட நுழைவுச்சீட்டு விலை உயரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது. இந்த நிலையில், உள் ளாட்சி அமைப்புகள் மூலம் திரைப்பட நுழைவுச்சீட்டுக்கு 30% கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டுவந்தது. இதையும் சேர்த்தால் இந்தத் துறைக்கான மொத்த வரி 48% ஆக ஆகி விடும். “ரூ100க்கும் அதிகமாக அல்லது குறைவாக விலை உள்ள திரைப்பட நுழைவுச் சீட்டுக்குப் புதிய வரி ஏற்பாட்டின்படி முறையே 28% மற்றும் 18% வரி விதிக்கப்படும். “இதற்கும் அதிகமாக மாநகர நிர்வாகம் மூலம் 30% வரியை மாநில அரசு விதிக் கிறது,” என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் விளக் கினார். இணையம் வழி திரைப் படச்சீட்டு விற்பனை நேற்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் திரை உலகைச் சேர்ந்தவர்கள் அவசர கூட்டம் நடத்தி விவாதித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி (இடக்கோடி) பதவியேற்கயுள்ள தாகக் கூறப்படும் நிலையில், திருப்பதி ஏழுமலையான கோவில் அர்ச்சகர்கள் அவரைச் சந்தித்து ஆசி வழங்கினர். படம்: இணையம்

26 May 2019

ஜெகன்மோகன்: ஆண்டவன் தண்டனை கொடுத்துவிட்டார்

கட்டடத்தின் மாடிகளில் மூண்ட தீயைக் கட்டுப்படுத்த 19 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. படம்: இணையம்

26 May 2019

சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி