காவிரி தண்ணீர் திறப்பு: கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண் ணீர் திறப்பதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கு கடந்த இரு தினங்களாக விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் பல போராட்டங் களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை யிலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப் பட்டுள் ளதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. முதற்கட்டமாக கடந்த மாதம் 29ஆம் தேதியன்று 3 ஆயிரம் கன அடி நீர் திறக் கப்பட்டதாகவும், அதையடுத்து 30ஆம் தேதியன்றும் தண்ணீர் திறக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடவேண் டியது அவசியம் என கர்நாடகா அமைச்சர் கூறியதாகவும் தக வல் வெளியானது. இத்தகைய செய்திகளால் அம்மாநில விவ சாயிகள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், காவிரி நீரை விடுவதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக, பெங் களூரு, மைசூர் இடையேயான நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

அணைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மண்டியா காவல்துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் தெரிவித்துள்ளார். தங்கள் மாநில விவசாயிக ளுக்கே போதுமான தண்ணீர் இல்லை எனத் தெரிவித்துள்ள மாண்டியா விவசாய சங்கங்க ளின் தலைவர் மாதே கவுடா, தமிழகத்துக்குத் தண் ணீர் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதிகாரிகள் அவ்வாறு செய்யாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரி டும் எனவும் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.