கூடுதல் விலை கூடாது: அமைச்சர் கடும் எச்சரிக்கை

சென்னை: ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச் சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத் துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளிக்கை வரி தொடர் பாக முதல்வருடன் கலந்தாலோசிக்க இருப்பதாகக் கூறினார். “ தி ரை ய ர ங் க ங் க ளு க் கா ன கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும். “ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என்பதே தங்கள் அனைவரது விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், இதுவே தனது தலையாய கடமை என சசிகலா கணவர் நடராஜன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon