கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தை மாற்றத் துடிக்கிறது பாஜக: கி.வீரமணி

சென்னை: பசுக்களை முன்னிறுத்தி ஏராளமான கலவரங்கள் நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடியே ஒப்பு தல் வாக்குமூலம் தந்திருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி, மதக் கலவரத்தை ஏற்படுத்த சதி நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். சிவகங்கையில், செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மத்திய ஆட்சியாளர்கள் கலவரத்தை உண்டாக்கி தமிழகத்தை மாற்றத் துடிப்பதாகவும் மேலும் சாடி உள்ளார். “அதிபர் தேர்தலில் கழகங்க ளின் ஆதரவும் வாக்குகளும் தேவையென்று ஓடி வருகிறார்கள், தேடி வருகிறார்கள். இதற்கு மட் டும் கழகங்கள் தேவையா? “கழகங்கள் இல்லாத மாநிலங் களில் பசுவுக்கு கொடுக்கும் பாது காப்பை மனிதர்களுக்குக் கொடுப் பதில்லை. பலத்த எதிர்ப்புக்குப் பிறகு வேறுவழியின்றி பிரதமரே இந்தச் சம்பவத்தை ஒப்புக்காகக் கண்டித்துள்ளார்,” என வீரமணி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒற்றைக் கட்சி, ஒற்றை ஆட்சி அமைப்பதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக் கம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த அடிப்படையில் தான் நாடு முழுவதும் ஒற்றை வரியையும் கொண்டுவர பாஜகவினர் துடிப்பதாக விமர்சித்துள்ளார். ஒற்றை வரிவிதிப்பின் அம்சங்க ளும், அதன் விளைவுகளும் எதிர் பார்த்த வெற்றியைத் தருமா என் பது சந்தேகம்தான் என்று அவர் கூறியுள்ளார். ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை யில் அவசர கதியில் அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

“பொதுமக்களை, குறிப்பாக சாமானியர்களைப் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டியை அமல் படுத்தி இருக்க வேண்டும். நோக்கம் சிறந்ததாக இருந்தாலும், மக்களிடம் இதுகுறித்து தெளிவு படுத்த உரிய அவகாசம் தேவை. மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. தமிழகத்தில் ஆட்களே இல்லாத கட்சியாக, கைபேசியில் ‘மிஸ்டு கால்’ என்ற திட்டத்தை நடத்தும் கட்சியாக பாஜக இருந்து வருகிறது. இப்படிப்பட்டவர்கள் கழகங்கள் இல்லாத தமிழகம் வேண்டும் எனக் கூறலாமா?” என கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்