சுடச் சுடச் செய்திகள்

கதிராமங்கலம்: போராட்டம் தீவிரம்: முதல்வர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

தஞ்சை: எண்ணெய் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொள்ள தஞ்சை, கதிராமங்கலம் பகுதி யில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் போராட்டக் குழுவினர் முதல்வர் பழனிசாமி இல்லத்தின் முன் திரள இருப்ப தாக வெளியான தகவலால் சென்னையில் நேற்று பரபரப்பு நிலவியது. மொத்தம் 300 பேர் மூன்று குழுக்களாகப் பிரிந்து முதல்வர் இல்லம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை ஆகியவற்றுக்குச் சென்று மனுக்கள் அளிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

நேற்று மாலை அவ்வாறு யாரும் திரளவில்லை என்ற போதிலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் நீடித்து வருகின்றன. கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்க ளில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 30ம் தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். படம்: தகவல் ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon