மணல் விற்பனை மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்: ராமதாஸ்

தமிழகத்தில் மணல் விற்பனையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கெனவே வறண்டு போய்க் கிடக்கும் ஆறுகளில் மேலும் மேலும் மணல் அள்ளுவதுதான் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதி கரித்து வரும் தண்ணீர்த் தட்டுப் பாட்டிற்குக் காரணம் என்று கூறப் படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொருளியல் சீர்குலையும் அள விற்கு மணல் கொள்ளை, ஊழல் நடந்துள்ளதாக ராமதாஸ் புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

“2011-12ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசுக்கு மணல் குவாரிகள் மூலம் 188.03 கோடி ரூபாய் வருமானம் கிடைத் தது. 2012-13ஆம் ஆண்டில் ரூ.188 கோடி என சற்றே சரிந்த அந்த வருமானம், அதற்கடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி எனத் தொடர்ந்து சரிந்தது. இப்போது 2016-17ஆம் ஆண்டில் மணல் விற்பனை மூலம் ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைத் துள்ளதாக தமிழக அரசு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மணல் கொள் ளையும் அதன்மூலம் இடம்பெற்று வரும் ஊழலும் அதிகரித்து வரு வதற்கு இதுவே சான்று,” என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு கூறிய தொகை யைப் போல 500 மடங்கு அதிக வருமானம் மணல் மூலம் கிடைக் கிறது என்பதுதான் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவராகவும் வடதமிழ கத்தில் மணல் குவாரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக வும் சொல்லப்படும் சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மதிப்பைச் சுட்டிய அவர், அதுவே மணல் விற்பனை யில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பதற்குச் சான்று என்றும் சொன்னார்.

“மணல் குவாரி மூலம் சேகர் ரெட்டி நாளொன்றுக்கு ரூ.1.35 கோடி என, ஆண்டுக்கு 493 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள் ளார். இரண்டு மாவட்டங்களில் ஆற்றில் மணலை அள்ளி லாரி களில் நிரப்பும் வேலையை மட்டும் அவரது நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. அப்படி இருக்க, 32 மாவட்டங்களில் மணல் குவாரி நடத்தும் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்க வேண் டும்?” என்று ராமதாஸ் கேட்டார்.

உண்மையில், மணல் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு நூறு கோடி ரூபாய் என ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது என்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் கொள்ளையடித்தது போக வெறும் ரூ.86.33 கோடி மட்டுமே அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். இப்படி மணல் கொள்ளை மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கூவத்தூர் தனி யார் சொகுசு விடுதியில் கொண் டாட்டங்கள் அரங்கேறின என்றும் அங்கு அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக் கில் பணமும் தங்கமும் வழங் கப்பட்டன என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

இந்த ‘மெகா’ மணல் ஊழல் பற்றி விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்