தமிழில் இலக்கண சரிபார்ப்பு மென்பொருள்

சென்னை: அக்டோபரில் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ள நிலையில், நவீன தமிழ் உரைக்கான சிறந்த இலக்கணச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக் கப்படும் என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் (படம்) தெரிவித்துள் ளார். சட்டப்பேரவையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். “கணினி வழி கற்றலில் உள்ள ஐயப்பாடுகளைக் களைய இந்த மென்பொருள் உதவும். தமிழ் உரையில் உள்ள பிழைகளை கண் டறிந்து திருத்திடவும் பரிந்துரைக் கும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார். தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள மென்பொருள் ஏற்றுமதியாகி உள்ளதாக அவர் கூறினார்.