சுடச் சுடச் செய்திகள்

இலவச வீடு- மத்திய அரசின் பேரில் மோசடி; பணம் இழந்த அப்பாவிகள்

சேலம்: மத்திய அரசு இலவசமாக வீடு கட்டித் தருவதாகக் கூறி, ஏமாற்றுப் பேர்வழிகள் சிலர் பொதுமக்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 எனப் பணம் வசூலித்து மோசடி செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏமாற்றுக்காரர்கள் கூறியதை நம்பி, இலவச வீடு பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிக விலை கொடுத்து வாங்கிய பலர், அந்நபர் கள் கூறியதை நம்பி பணம் தந்து லட்சக்கணக்கில் ஏமாந்துள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம் பட்டியில் மத்திய அரசு இலவச வீடு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அண்மையில் வதந்தி பரவியது.

இணையம் வழி இதற் கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் காடை யாம்பட்டியிலிருந்து அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே மத் திய அரசு ஏற்கும் என்றும் ஏமாற் றுப் பேர்வழிகள் தகவல் பரப்பினர். இதை நம்பிய பலரும் காடை யாம்பட்டிக்குப் படையெடுத்தனர். சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அளிக் கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட தால் காடையாம்பட்டியில் உள்ள இணைய மையங்களில் கூட்டம் அலை மோதியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon