சுடச் சுடச் செய்திகள்

ஜிஎஸ்டி=பறிபோனது மாநில உரிமை: தம்பிதுரை கவலை

சென்னை: நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரியால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசியபோது, ஜிஎஸ்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், புதிய வரி விதிப்பு முறையால், மாநில அரசுகளுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்றார்.

“ஜிஎஸ்டி வரி விதிப்புச் சட்டம் மாநிலங்களின் உரிமையைப் பறிக் கும் செயல்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பாக, பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைக ளுக்கு ஏற்கெனவே மாநில அரசு வரி விதித்து, அதன் வழி வரு மானம் வந்துகொண்டிருந்தது. “ஆனால், தற்போது இந்த புதிய வரி விதிப்பு முறையால் அந்த அதிகாரம் முழுவதும் மத் திய அரசின் கைக்குச் சென்றுவிட் டது.

இதனால் மாநிலங்கள் போது மான நிதி ஆதாரம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட் டிருக்கிறது,” என்றார் தம்பிதுரை. டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி ஆய்வுக் கூட்டத்தில் மாநில அரசுகள் சார்பில் இது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரி வித்த அவர், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டு வதற்காக மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி உதவும் என மத்திய நிதியமைச்சர் உறுதிய ளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

தம்பிதுரை. படம்: இணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon