ஜிஎஸ்டியால் கட்டுமானத் தொழில் முடங்கும் ஆபத்து: கட்டட தொழிலாளர் சங்கம் கவலை

சென்னை: ஒரே வரிவிதிப்பு முறை என்ற கொள்கையின் அடிப்படை யில் நாடு முழுவதும் சரக்கு சேவை வரியை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய அரசு. இதனால் கட்டுமானத் தொழிலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் மத்திய சங்கத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் தமது கவலையை வெளிப்படுத்திய அவர், தமிழகத் தில் விவசாயிகளும் கட்டுமானத் தொழிலாளர்களும்தான் நிரந்தர வருமானம் இன்றித் தவித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

கட்டுமானத் தொழிலாளர்கள், நில மேம்பாட்டாளர்கள் எனப் பலரும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜூலை 6ஆம் தேதியன்று அனைத்துத் தரப்பினரும் மிகப் பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார். தற்போது தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிக் கிடப்பதாகச் சுட்டிக்காட்டிய பொன் குமார், இதன் எதிரொலியாக வீட்டுமனை விற்பனை அடியோடு பாதித்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என்றும் டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரித்து, சிமெண்ட், செங்கல், மணல் விலை மேலும் அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறினார். “இரண்டு யூனிட் மணலின் விலை ரூ.50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அங்கீகரிக்கப் படாத வீட்டு மனைகளை விற்க முடியாத நிலை, பத்திரப்பதிவுக்கு அதிக கட்டணம் என ரியல் எஸ்டேட் தொழில்மீது பன்முனைத் தாக்குதல் நடந்துள்ளது,” என்றார் பொன்குமார்.

சென்னை புறநகர்ப் பகுதியில் மட்டும் தற்போது ஏறத்தாழ 1.3 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, நில மேம்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்ப தாகவும் ஜிஎஸ்டி அமலான பின் னர் வீட்டு விற்பனைக்கு 18 விழுக் காடு வரி வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக வீடுகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

பொன்குமார். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon