பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்னும் ஒரு வாய்ப்பு: உச்ச நீதிமன்றம் வலியுறுத்து

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் போனவர்களுக்கு, அதற்கு அவர் கள் நியாயமான காரணங்களை நிரூபிக்கும் பட்சத்தில், இன்னொரு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று இந்திய அரசையும் ரிசர்வ் வங்கி யையும் உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தி இருக்கிறது. “நியாயமான காரணங்களுக் காக சிலர் பணத்தை மாற்ற முடி யாமல் போயிருக்கலாம். அவர்கள் அப்பணத்தை வங்கியில் செலுத்த வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது,” என்று தலைமை நீதிபதி ஜே எஸ் கேகர் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.

“நேர்மையாக, கடினமாக உழைத்துச் சம்பாதித்த ஒருவரது பணத்தைக் குப்பையில் கொட்டி, வீணாக்க முடியாது. அத்தகைய வர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாங்கம் முன்னர் உறுதியளித்து இருந்தது. அரசாங்கம் கொடுத்த கால அவ காசத்தின்போது ஒருவர் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருந்தால் அவரால் எப்படி பணத்தை மாற்றி இருக்க முடியும்? அத்தகைய நியாயமான காரணங் களால் பணத்தை மாற்ற முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு மறுக் கப்படக்கூடாது,” என்று நீதிபதிகள் கூறினர்.