அணிகள் இணையும்: தினகரன் நம்பிக்கை

பெங்களூர்: அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூரில் செய்தி யாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகக் கூறினார். இரு தினங்களுக்கு முன்னர் திடீரென மும்பை புறப்பட்டுச் சென்ற தினகரன், நேற்று பெங்க ளூர் சென்று பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள தனது சித்தி சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது. அதிமுகவின் இரு அணிகளை யும் இணைப்பதற்கான முயற்சிக ளில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இருதரப்புக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள தாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், பேச்சுவார்த் தையே நடைபெறவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதிபட தெரி வித்தனர்.

இந்நிலையில், இரு அணிகளும் இணைந்து செயல்பட முடிவாகி யுள்ளதாகவும் இதற்காக ஏழு பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்படும் என்றும் அதற்கு ஓபிஎஸ் தலைமையேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் கட்சியின் பொதுச்செயலர் பதவி யைவிட இந்தக் குழுவின் தலை வருக்கு அதிக அதிகாரங்கள் கிட்டும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில், சசிகலாவை நேற்று சந்தித்துள்ளார் தினகரன். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது சசிகலாவின் கண வர் நடராஜன், அதிமுகவின் அதி காரபூர்வ பேச்சாளர் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

தமக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்ததாகவும் அண்மைய பேட்டியில் நடராஜன் கூறியது முற்றிலும் பொய்யான தகவல் என தினகரன் தெளிவுபடுத்தினார். மேலும் இரு அணிகளின் இணைப்புக்காக 60 நாட்கள் விலகி இருப்பதாகத் தெரிவித்த அவர், ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் மீண்டும் கட்சிப் பணிகளைத் துவங்க இருப்பதாகத் திட்டவட்ட மாகத் தெரிவித்தார். இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு தடையேதும் இல்லையென சென்னை உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தினகரன் ஆதர வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு