தமிழகத்தில் ஏன் பிறந்தோம் என மக்களை நினைக்க வைக்கிறது அதிமுக ஆட்சி: ராமதாஸ்

பொள்ளாச்சி: தமிழகத்தில் ஏன் பிறந்தோம் என மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு தற்போதைய அதிமுக ஆட்சி நடந்து வருவதாக பாமக நிறுவ னர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். எந்தச் சூழலிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாமக கூட்டணி வைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். ‘கழகத்தின் கதை’ என்ற பெயரில் அதிமுகவின் செயல்பாடு கள் குறித்து தாம் எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழாவிலேயே ராமதாஸ் இவ்வாறு குறிப்பிட்டார். பெரம்பலூரில் நடைபெற்ற அந்நிகழ்வில் பேசிய அவர், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இலவசங்களை வாரி இறைத்து மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்துவிட்ட தாகச் சாடினார்.

“அமைச்சர்களே தற்போது ஒருவரையொருவர் குறைகூறி சண்டையிட்டுக் கொள்வது வேத னையளிக்கிறது. மது, ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகி யவை அதிமுக அரசின் தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன. “முதல்வர்கள் மாறினாலும் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் நூறு ரூபாய்தான் இருந்தது. ஆனால் தற்போது அமைச்சர்களே கோடிக்கணக் கில் ஊழல் செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது,” என்றார் ராமதாஸ். தற்போது தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் சக்தியாக பாமக உருவெடுக்கும் என்றார். “ஊடகத்தோடு மட்டும்தான் எங்கள் கூட்டணி. ஊடகமும் அரசியலும் என்கிற பெயரில் சென்னையில் பசுமை தாயகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது. “அரசியல் ஆதாயத்திற்காக இதனைச் செய்யவில்லை,” என்று ராமதாஸ் மேலும் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்