நள்ளிரவில் 900 வீடுகளில் போலிசார் சோதனை

ஹைதராபாத்: ஆந்திராவில் பிர பல ‘முத்தூட் பைனான்ஸ்’ நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களைப் பிடிக்க 900 வீடுகளில் சோதனை நடத்தப்பட் டது. நள்ளிரவில் நடத்தப்பட்ட இச்சோதனை சுமார் எட்டு மணி நேரம் நீடித்தது. போலிசாரும் தீவிரவாதத்திற்கு எதிரான படையினரும் ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஹேப்பி ஹோம்ஸ் டவர் குடியிருப்பில் நடத்திய இச்சோதனையின்போது நிதி நிறுவனத்தில் கொள்ளை யடிக்க முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரைத் தேடினர். கொள்ளையர்களில் இருவர் வாடிக்கையாளர்களைப் போல் நடித்தாகவும் மற்றவர்கள் துப்பாக்கி ஏந்தி மிரட்டியதாகவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. அப்போது ஊழியர்கள் அவசர உதவி பொத்தானை அழுத்திய தால், கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அங்கிருந்த குடியிருப் பில் கிடந்ததையடுத்து அப்பகுதி யில் நள்ளிரவிலும் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு