சீனா: இந்தியாவை விரட்டி அடிப்போம்

புதுடெல்லி: எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன ஊடகம் இந்தியாவை எச்சரித்துள்ளது. சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவம் தனது படை களை விலக்கிக் கொள்ளவில்லை என்றால், அங்கிருந்து இந்தியப் படைகளை விரட்டி அடிக்கும் சக்தி சீனாவிற்கு உள்ளது என்று அந்நாட்டின் ‘க்ளோபல் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா-சீனாவுக்கு இடையில் போர் வந்தால், இந்தியா அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அது கூறியுள்ளது. 1962ஆம் ஆண்டு இரு நாடு களுக்கும் இடையில் நடந்த போரைச் சுட்டிக்காட்டி இப்படி கருத்துக் கூறியுள்ளது சீனா. எல்லை பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “இந்திய எல் லையை ஒட்டியுள்ள பூட்டானின் எல்லை பகுதியை சீனா ஆக்கிர மிக்க நினைக்கிறது. இந்தியாவும் பூட்டானும் எல்லை பகுதியைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன.

“1962ஆம் ஆண்டு இருந்த இந்தியா வேறு, இப்போது இருக்கும் இந்தியாவின் நிலை வேறு,” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகை யில் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்தியாவிற்கான சீனத் தூதர், “தற்போதைய பதற்றத்தைத் தணிக்க வேண்டுமானால் தனது படைகளை இந்தியா திரும்பப் பெறவேண்டும். “இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது இந்தியாதான் என் றார். எனவே எவ்வித நிபந்தனை யும் இல்லாமல் எல்லையில் உள்ள படைகளை இந்தியா திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சு நடத்து வதற்குரிய சூழல் உருவாகும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அந்த மருந்துக் கடைக்காரர் குழந்தைக்கு ஊசிபோட்டு தாயையும் குழந்தையையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். மாதிரிப்படம்: இந்திய ஊடகம்

14 Dec 2019

மருந்துக்கடைக்காரர் போட்ட ஊசி; ரத்த வாந்தி எடுத்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியாவின் அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

14 Dec 2019

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் : மூவர் உயிரிழப்பு