‘தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்’

ஜெருசலம்: தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அவருக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு விமான நிலையத் தில் உற்சாக வரவேற்பளித்தார். இஸ்ரேலுக்குச் சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மோடியை வரவேற்று பேசிய அந்நாட்டு பிரதமர், “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்,” என்றார். பின்னர் அங்கு செய்தியாளர் களைச் சந்தித்த மோடி, “இந்தியா, இஸ்ரேல் உட்பட உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியமான ஒன்று. “இதற்காக உலக நாடுகள் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.

“தீவிரவாதத்தை ஒழிக்க இந்தி யாவும் இஸ்ரேலும் கைகோத்து போராடும். “மேலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடினால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கமுடியும்,” என்றார். மேலும் இஸ்ரேல் அதிபர் ரெவின் ரிவ்லினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்து இரு வரும் பேசியதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இதற்கிடையே, மோடியை கௌரவிக்கும் வகையில், ‘இஸ்ரேலி க்ரைசாந்துமன்’ என்ற மலருக்கு ‘மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனிமேல் அது ‘மோடி’ என்று அழைக்கப்படும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. மோடியின் இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தீவிரவாத ஒழிப்பு நட வடிக்கை, பாதுகாப்பு, எரிசக்தி, நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட துறைகள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது), அந்நாட்டு அதிபர் ரெவின் ரிவ்லினை (இடது) சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி