கதிராமங்கலம் குழாயில் உடைப்பில்லை; மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

கும்பகோணம்: கதிராமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏதும் இல்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எனினும் அப்பகுதியில் குடிநீரில் மாசு கலந்து வருவது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையே கதிராமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

எண்ணெய்க் குழாய்களை நிரந்தரமாக அகற்றக் கோரி கதிராமங்க லத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான போராட்டங்கள் நீடித்து வருகின்றன. போராட்டம் நடத்தியபோது கைதான 9 பேரையும் விடுவித்தால்தான் அரசுத் தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என கதிராமங்கலம் பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.