மோசடி அரசியல் தரகர் சுகேஷ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

கோவை: பிரபல அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றச் சாட்டு தொடர்பில் கோவை காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்தின் பேரில் கைதானார் சுகேஷ். இதையடுத்து டெல்லி போலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே வேறு சில மோசடி வழக்குகளிலும் சுகேஷ் சம்பந்தப்பட் டுள்ளார். அவற்றுள் ராஜவேலு என்பவரிடம் கர்நாடகா மாநில முதல்வரின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அரசு ஒப்பந்தப்புள்ளி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து இரண்டே கால் லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கும் ஒன்று.

இந்த வழக்கு தொடர்பில் கோவை நீதிமன்றத்தில் சுகேஷ் முன்னிலைப் படுத்தப்பட்டார். அப்போது அவர் மீதான குற்றப்பத்திரிகையைக் கோவை போலிசார் தாக்கல் செய்தனர். மொத்தம் 60 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையை சுகேஷ் பெற்றுக்கொண்ட பின்னர், இந்த வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரப்பட்டார் சுகேஷ். விசா ரணை முடிந்த பின்னர் போலிசார் மீண்டும் அவரை ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

Loading...
Load next