பேரவையில் பாட்டுப் பாடி சவால் விடுத்த திமுகவினர்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளும் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே தினமும் கடும் வாக்கு வாதங்கள் நிகழ்ந்து வருகின் றன. இந்நிலையில், இரு கட்சி உறுப்பினர்களும் நேற்று முன் தினம் போட்டி போட்டுக் கொண்டு எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பாடல்களைப் பாடினர். இதனால் பேரவையில் கலகலப்பு நிலவியபோதிலும், விவாதங்களின் முடிவில் ஆட் சியைக் கலைத்துவிட்டு, தேர் தலைச் சந்திக்கத் தயாரா என ஆளுங்கட்சிக்குச் சவால் விடுத்தது திமுக. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் அன்பழகன், “எம்ஜிஆர் நடித்த படத்தின் பாடலான, ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’ என்பது போலத்தான்தற்போது தமிழக விவசாயிகள் நிலைமை உள்ளது,” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர்,

அக்குறிப்பிட்ட பாடலின் கடைசி இரு வரிகளை யும் அன்பழகன் பாட வேண்டு மென வலியுறுத்தினர். அன்பழ கன் அதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்துப் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, “காலஞ்சென்ற ஜெயலலிதா இல்லாத அவையில் இனி பாடக்கூடாது என்று இருந்தேன். ஆனால் உங்களால் பாடவேண் டிய நிலை ஏற்பட்டுவிட்டது,” எனக் கூறிவிட்டு, அன்பழகன் குறிப்பிட்ட பாடலில் இருந்து, ‘நானே போடப்போறேன் சட் டம்... நன்மை விளையும் திட் டம்’ என்ற வரியைப் பாடினார். அதை வரவேற்று அதிமுக உறுப்பினர்கள் மேசையைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கிடையே அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி, பேசுகையில் அதிமுக ஆட்சி எப்போது கவிழும் என்று திமுகவினர் காத்திருப்பதாகக் குறை கூறினார்.

இதனால் ஆவேசமடைந்த திமுக கொறடா சக்கரபாணி, அதிமுகவில்தான் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது என் றும் யாரை யார் கவிழ்ப்பது என்று அதிமுகவினர்தான் காத் துக் கிடப்பதாகவும் சாடினார். “ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த 122 எம்எல்ஏக்களிடம் குழப்பம் நிலவுகிறது. பதவி விலகி தேர்தலைச் சந்திக்கத் தயாரா? தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்,” என்று சவால் விடுத்தார் சக்கரபாணி.

ஜெ. அன்பழகன் எம்எல்ஏ.
படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்