12 இடங்களில் சிபிஐ சோதனை: பாஜகவுக்கு எதிராக சீறிய லாலு

முன்னாள் பீகார் முதலமைச்சரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்குச் சொந்த மான 12 இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோத னைகளை நடத்தினர். புதுடெல்லி, பாட்னா உள்ளிட்ட ஐந்து நகரங் களில் காலை முதல் சோதனை நீடித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த போது ஹோட்டல்களுக்கு குத் தகை விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ தெரிவித் திருந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, பீகார் துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி, ஐஆர்சிடிசி முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், லாலு வின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேம்சந்த் குப்தாவின் மனைவி சுஜாதா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004=2009ஆம் ஆண்டுகளில் மத்திய ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் ஐஆர்சிடிசியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த சில ஹோட்டல்களைக் கட்டமைப்பது மற்றும் பராமரிப் பதற்கு விடப்பட்ட குத்தகைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு ஏக்கர் நிலம் பரிசாகப் பெற்றதாகவும் தகவல்கள் வெளி யாயின. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்திக்கொண்டு இருந்த அதே சமயம் செய்தியாளர்களிடம் லாலு பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon