கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள்: மாணவி மீது குண்டர் சட்டம்: 68 மாணவர்கள் இடைநீக்கம்

சென்னை: கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னை கல்லூரி மாணவர்கள் 68 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய சேலத்தைச் சேர்ந்த மாணவி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்து நெடுவாச லிலும், கதிராமங்கலம் பகுதியி லும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும், சமூக ஆர்வலர் களும் இப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலை யில், அரசுத் தரப்பிலும் சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போராட்டக் குழுவின் சார்பில் சேலத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி என் பவர் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.

இந்நிலையில், இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம் சாட்டி சேலம் போலிசார் கைது செய்து கடந்த 13ஆம் தேதி சிறையில் அடைத்தனர். இந்நிலை யில் மாணவி வளர்மதி மீது நேற்று திடீரென குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க் கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon