அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்

கோபி: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு காவல்துறையை ஏவி அடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் மிக விரைவில் புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். “கடுமையான வறட்சியினால் தமிழக விவசாயிகள் 400 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகும், கர்நாடகா அரசின் ஆதரவு தேவை என்பதாலேயே மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகிறது. நெடுவாசலில் தொடர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை மத்திய, மாநில அரசுகள் அடக்க நினைக்கின்றன,” என்றார் வைகோ.