சுடச் சுடச் செய்திகள்

மதுரை: வங்கியில் கள்ளநோட்டு செலுத்த முயற்சி

மதுரை: வங்கியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவரை மதுரையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போலிசார் தீவிர மாக விசாரணை நடத்தி வரு வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கேரளாவைச் சேர்ந்தவர் பாபு கேரியோ. 45 வயதான இவர், நேற்று முன்தினம் மதுரைக்கு வந்துள்ளார். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த 55 வயதான ஆனந்த ராஜுடன் அவர் கள்ள நோட்டு களை புழக்கத்தில் விட திட்ட மிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் ஆரப் பாளையத்தில் உள்ள வங்கிக் கிளை ஒன்றுக்குச் சென்றனர். அந்தக் கிளையில் உள்ள குறிப் பிட்ட கணக்கில் பணம் செலுத்த வந்ததாகக் கூறியுள்ளனர். இதையடுத்து புதிதாக அறிமுகமாகி உள்ள இரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு களை அவர்கள் வங்கிக் காசா ளரிடம் கொடுத்தனர். மொத்தம் 75 ரூபாய் நோட்டுகள் அளிக் கப்பட, அவற்றை ஆய்வு செய்த காசாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை அளித்த இருவருக்கும் சந்தேகம் ஏற்படாத வாறு அவர் தன் உயரதிகாரிகளிடம் விவரம் தெரிவித்தார். கள்ள நோட்டுகள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித் தனர். விரைந்து வந்த போலிசார், இருவரையும் உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற் கொண்டனர். இந்த கள்ள நோட்டுகளை அச்சடித்தது யார்? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. மத்திய அரசு அண்மையில் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு களை புதிதாக அறிமுகப் படுத்தியது. அதற்குள் அதன் கள்ள நோட்டுகள் தயாராகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை மேலும் நீடித்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon