ஒரே குடும்பத்தில் 8 மாதங்களில் 7 பேர் மரணம்: நீடிக்கும் மர்மம்

தி.மலை: கடந்த எட்டு மாதங் களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந் துள்ள சம்பவம் திருவண்ணாமலை யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தண்டாரை பகு தியைச் சேர்ந்த அந்தோணி ராஜின் 13 வயது மகன் கிரிஸ் டோபர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தான். இதையடுத்து வரிசையாக 6 பேர் பலியாகி உள்ளனர். அவர்க ளில் கடந்த திங்கட்கிழமை உயிரி ழந்த 4 வயதுக் குழந்தை சரணும் அடக்கம். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தை சரணின் மரணத்துக்கு டெங்கி காய்ச்சலே காரணம் என்பதை மாவட்ட ஆட்சி யர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உயிரிழந்த 7 பேருமே தங்கள் இறப்புக்கு முன் கடும் வயிற்று வலி எனக் கூறியுள்ளனர். மேலும் அனைவருக்கும் கடும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கிரிஸ்டோபர் இறந்த பின்னர் வினோத் (23 வயது), நெல்சன் (11 வயது), கிருத்திகா மெர்லின் (7 வயது), நெல்சனின் பாட்டனார் ஜோசப் (70 வயது), மெர்லினின் பாட்டி கிரிஸ்டா (65 வயது) ஆகிய அனைவரும் அதே மாதத்தில் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

கடைசியாக இறந்த மூதாட்டி கிரிஸ்டாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் விஷம் இருந்ததாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. அவரது கல்லீரல், சிறு நீரகப் பகுதிகளிலும் ரத்தத்திலும் எலி மருந்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகும் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக் கப்பட்டதாகத் தெரியவில்லை. கிரிஸ்டா குடும்பத்தாரின் ஒத்து ழைப்பு சரிவர இல்லை என போலிஸ் தரப்பில் காரணம் கூறப் படுகிறது. 7 பேரின் மரணத்துக்கு சதி வேலையே காரணம் என அவர்களின் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்ற னர். ஆனால் போலிஸ் தரப்பிலோ போதிய ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon