சுடச் சுடச் செய்திகள்

கதிராமங்கலத்தில் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனமும் காவல்துறையினரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிராமங்கலம் மக்கள் கடந்த 6 நாட்களாக அங்குள்ள அய்யனார் கோவில் பகுதியில் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கதிராமங்கலத்தில் 10 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 80 பேர் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon