சுடச் சுடச் செய்திகள்

பழைய இரும்புக் கடையில் ஆயுதங்களை விற்ற ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிக எடையுள்ள குண்டுகளை பழைய இரும்புக் கடையில் விற்று காசாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருக்கும் பொத்தமேட்டுப்பட்டி எனும் சிற்றூரில் அருளானந்தம் என்பவர் பழைய இரும்புக் கடை ஒன்றை வைத்துள்ளார். அந்தக் கடையில் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி திடீரென குண்டு வெடித்ததில் அங்கு வேலை செய்து வந்த மாரிமுத்து என்பவர் பலியானார். அருளானந்தம் உட்பட மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து போலிஸ் விசாரணையைத் தொடங்கியது. அதில், தாங்கள் பயன்படுத்திய குண்டுகளில் வெடிக்காதவற்றை அருளானந்தத்தின் கடையில் சில ராணுவ வீரர்கள் விற்றது தெரியவந்தது. சென்ற மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பெங்களூரிலிருந்து வந்த இந்திய ராணுவ ‘ரைஃபிள்ஸ்’ படையினர் வீரமலை வனப்பகுதியில் முகாம் அமைத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடு பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் யாரோதான் பழைய இரும்புக் கடையில் குண்டுகளை விற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

விசாரணைக்காக அருளானந் தத்தின் கடைக்குச் சென்றிருந்த போலிசார், வெடிகுண்டுச் செயல் இழப்பு நிபுணர்கள், தடயவியல் அதிகாரிகளின் துணையுடன் அந்தக் கடையில் வேறு ஏதேனும் குண்டுகள் இருக்கிறதா என்று சோதனை நடத்தினர். அப்போது, சாக்குமூட்டை ஒன்றில் இருபதுக் கும் மேற்பட்ட குண்டுகள் இருந் ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அவையனைத்தும், ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தும் அதி வேக குண்டுகள் என்று சொல்லப் படுகிறது. இதற்கிடையே, மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த அருளானந்தத்துக்கு நினைவு திரும்ப, அவரிடம் போலிசார் வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது, “சென்ற மாதம் 27ஆம் தேதி பச்சை நிற ராணுவ வாகனத்தில் இரு வீரர்கள் வந்து இறங்கினர். அவர்கள் பழைய குண்டுகளை விற்க விரும்பு வதாகத் தெரிவித்தனர். அவற்றை நான் வாங்க மறுத்தேன். ஆனா லும், இந்தக் குண்டுகள் வெடிக் காது என்று வற்புறுத்தி, 45 கிலோ எடையுள்ள குண்டுகளைக் கொடுத்து, ஒரு கிலோ ரூ.80 என 3,600 ரூபாயைப் பெற்றுச் சென்றனர்,” என்று அருளானந்தம் கூறினார். இதையடுத்து, சம்பவம் குறித்து சென்னையில் இருக்கும் தெற்கு மண்டல ராணுவத் தலைமையகத் திற்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்த போலிசார், சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon