சசிகலா இருக்கும் சிறையில் 32 கைதிகளுக்குச் சித்திரவதை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங் களூரு மத்திய சிறைச்சாலையில் 32 கைதிகள் கொடூரமாகத் தாக் கப்பட்டு பலத்த காயங்களுடன் இரவோடு இரவாக வேறு சிறை களுக்கு மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்கக்கோரி கர்நா டக மாநில சிறைத்துறை உயரதி காரிகள் இருவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மாநில சிறைத்துறை உயரதிகாரி ஒருவருக்கும் சிறை ஊழியர் களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சுக போகமாக இருந்து வருகிறார் என்று டிஐஜி ரூபா, மாநில போலிஸ் தலைமை அதிகாரி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் அது குறித்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon