குண்டர் சட்டத்தில் மாணவி வளர்மதி கைது: சீமான் கடும் கண்டனம்

சென்னை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான வளர்மதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கைகளை விநியோகித்தார். இதையடுத்து அவரைப் போலிசார் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வளர்மதி மீதான நடவடிக்கை என்பது தமிழக அரசின் சர்வாதிகாரமான காட்டு மிராண்டித்தனம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் சாடியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில், தமிழகத்தில் நடப்பது எடப் பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கமா? அல்லது பாஜகவின் அடிமை அரசாங்கமா? என்ற கேள்விக்கு வளர்மதி மீதான நடவடிக்கை பதில் அளித்துள்ள தாகக் கூறியுள்ளார்.

“வளர்மதியைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்திருப்பதன் மூலம் பாஜகவின் பரிசுத்தமான விசுவாசிகள் என்பதை எடப்பாடி பழனிசாமி அரசு நிரூபித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவ தாகச் சொல்லப்படும் நாட்டின் நலனுக்காக, இனத்திற்காகப் போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது.

“தாய் மண்ணைக் காக்க, காலங்காலமாய் உணவிட்டு வந்த விவசாயியைக் காக்கப் போராடிய பேராசிரியர் ஜெயராமன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளை ஞர் பாசறை செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரைப் பிணையில்கூட விடுவிக்காது தடுத்து வருவதும் இது நாடா? அல்லது மிருகங்கள் உலவும் காடா? என நினைக்கத் தோன்றுகிறது,” என சீமான் ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காகப் போராடுவது என்பது ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்டுள்ள அவர், மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து தனது பாசிசக் கால்களில் ஜனநாயக விழுமியங்களை மிதித்து அழிப்ப தையே தனது அரசின் கடமை யாகக் கருதுவதாகக் காட்டத் துடன் விமர்சித்துள்ளார்.

வளர்மதி மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், அவர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இல்லையேல், போராட்டச் சக்திகளை ஒன்றுதிரட்டி இந்தச் சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் பெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் எச்சரிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon