சுடச் சுடச் செய்திகள்

கொட்டும் மழையில் விவசாயிகளின் போராட்டம்

புதுடெல்லி: விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின் றனர். நேற்று முன்தினம் எலும்புக் கூடுகளுடன் நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டம் வட மாநில ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள் ளது. மேலும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கூடிய ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்சட்டையின்றி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அரசு தங்களது கோரிக்கை களுக்குச் செவிசாய்க்கும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த அண்மையில் டெல்லி சென்றுள்ளனர்.

அங்கு கடந்த நான்கு நாட்களாகப் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் கனமழை பெய்தது. எனினும் அசராத விவசாயிகள் கொட்டும் மழையில் அரை நிர்வாண கோலத் துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. “கையோடு கொண்டு வந்த பொருட்கள், துணிமணிகளை வைப்பதற்குக் கூட இடமில்லை. கடும் குளிர் நிலவிய போதும், பல ஆயிரக்கணக்கான விவசாயிக ளின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டோம்,” என்றார் அய்யாக் கண்ணு. கடன் தள்ளுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறை யீட்டு மனுவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்திய அவர், மத்திய அரசும் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். போராட்டம் நேற்றும் நீடித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon