கறிக்குழம்பால் மூண்ட தகராறு: தாத்தாவைக் கொன்ற பேரன் கைது

நாமக்கல்: கறிக்குழம்பு சரியில்லை என்று கூறி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தன்னைக் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பேரன், தன் தாத்தாவை அடித்துக் கொன்றுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்தவர் மணிராஜா. இவர் நேற்று முன்தினம் தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அங்கு வந்த அவரது பாட்டனார் அய்யாசாமி பேரனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிராஜா, அவருடன் தகராறு செய்ய, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிராஜா ஆவேசத்துடன் அய்யாசாமியைக் கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். மணிராஜா கைதானார்.

Loading...
Load next