‘டெங்கிக் காய்ச்சலில் கவனம் செலுத்துங்கள், இல்லையேல் விலகுங்கள்’

சென்னை: டெங்கிக் காய்ச்சலில் கவனம் செலுத்துங்கள் எனத் தமிழக அரசுக்கு கமல் டுவிட்டர் தளத்தில் அறிவுரை கூறியுள்ளார். அண்மைக்காலமாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல்ஹாசன். அவருடைய சாடலுக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகிறார் கள். கமலின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவுக்குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். தற்போது தமிழக அரசுக்கு கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “பள்ளியில் இருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் களுக்கு நீட் பிரச்சினை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் டெங்கிக் காய்ச்சல் பற்றி எனக்குத் தெரியும். என் குழந்தை ஏறக்குறைய இந்தக் காய்ச்சலால் இறந்தே இருக்கும். எனவே தமிழக அரசே இதில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் விலகுங்கள்,” என்று கமல் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next