தஞ்சையில் 52 வீடுகள் எரிந்து நாசம்

சக்கராப்பள்ளி: தஞ்சை மாவட்டம், சக்கராப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 வீடுகள் தீக்கிரையாகின. நள்ளிரவில் ஒரு வீட்டில் பற்றிய தீ மற்ற வீடுகளுக்கு மளமளவென பரவியது. மக்கள் அனைவரும் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறிய தால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது. வீடுகளில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் தெரியவந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு