பள்ளிச் சீருடையில் வரும் தலைமை ஆசிரியர்

மதுராந்தகம்: மாணவர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக காஞ்சி புரம் மாவட்டம் மதுராந்தகம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிச் சீருடையில் வருகிறார். மா ற் று த் தி ற னா ளி யா ன ஸ்ரீதர், தலைமை ஆசிரியராக நான்கு ஆண்டுகளுக்கு முன் பதவி உயர்வு பெற்றது முதல் மாணவர்கள் அணியும் சீரு டையிலேயே பள்ளி வந்து செல்கிறார். அத்துடன் அப் பள்ளியை ‘ஸ்மார்ட்’ பள்ளி யாக மாற்றவும் ஆரம்பக் கல்வியைத் தரமாக வழங்கவும் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். ஆசிரியர் மீது மாணவர் களுக்கு உள்ள அச்சத்தைப் போக்க நண்பர்கள் போல பழகவேண்டும் எனவும் வலி யுறுத்தி வருகிறார். மாணவர்கள் முடிதிருத்தம் செய்யாமல் வந்தால் அவர் களுக்கு முடிதிருத்தம் செய்ய அவரே பணம் தந்து உதவுவ தாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர், கிராம மக்களால் பாராட்டப்படும் பள்ளிச் சீருடையில் வரும் தலைமை ஆசிரியர். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்