சதுரகிரி மலையில் 17,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கூடினர்

மதுரை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விருதுநகர் = மதுரை மாவட்ட எல்லையில் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு இன்று ஆடி அமா வாசைத் திருவிழா நடைபெறு கிறது. அதையொட்டி பக்தர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதிக் கப்பட்டுள்ளனர். சதுரகிரி மலைக் கோயிலில் நேற்று ஒரே நாளில் 17,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர். முன்னதாக அடிவாரத்தில் பக்தர்கள் கொண்டு சென்ற நெகிலிப் பைகள் பறிமுதல் செய் யப்பட்டன. தாணிப்பாறையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தாணிப்பாறை விலக்கு, தாணிப்பாறை அடிவாரம் ஆகிய இடங்களுக்கு அருகே உள்ள தற்காலிகப் பேருந்து நிலை யங்களிலும் கோயில் நுழைவு வாயிலிலும் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்