காவல்துறையினரால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் இருந்து காவல்துறையினர், அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரின் உதவியால் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க அண்மையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து ரயில்வே ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஜி.பொன் மாணிக்க வேலையே மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு அதிகாரியாக நியமிப்பதாக அறிவித்துள்ளது. அறநிலையத்துறை, தொல்லியல் துறையினருடன் இணைந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரணை அறிக்கையை அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Loading...
Load next