ஆம்பூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

ஆம்பூர்: இரும்புக் குழாய்களை ஏற்றிக்கொண்டு கொள் கலன் வாகனம் ஒன்று நேற்றுக் காலை சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் பச்சகுப்பம் மேம்பாலத்தில் கொள்கலன் வாகனம் சென்றது. அங்கு காலணி நிறுவனம் வாகனம் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க கொள்கலன் வாகன ஓட்டுநர் வலது பக்கம் திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம் சாலையின் எதிர்த்திசையில் பாய்ந்தது. அப்போது சாலையின் மறுபுறம் வேலூர் நோக்கி மாட்டுத் தீவன மூட்டை ஏற்றிவந்த லாரி மீது கொள்கலன் லாரி நேருக்கு நேர் மோதியது. கொள்கலன் ஏற்றி வந்த வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துத் தொங்கியபடி நின்றது. இந்தப் பயங்கர விபத்தில் லாரிகளின் முன் பகுதி நொறுங்கியது. 2 லாரிகளின் ஓட்டுநர்களும் இடிபாடுகளுக் குள் சிக்கி இறந்தனர். துப்புரவாளர்கள் இருவர் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடினர்.

Loading...
Load next