சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாதிகளின் இலக்காக இந்தியா

உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்நோக்கும் மூன்றாவது நாடு இந்தியா என்று அமெரிக்க வெளி யுறவுத் துறையிலிருந்து திரட்டப் பட்ட தகவல் ஒன்று தெரிவிக் கிறது. பயங்கரவாதமும் அதனை எதிர்கொள்ளுதலும் என்னும் ஆய்வுக்காக தேசிய கூட்டமைப்பு திரட்டிய அந்தத் தகவல் பயங்கர வாதத் தாக்குதலைப் பொறுத்த வரை ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதற்கு முன்பு வரை அந்த இடத்தில் பாகிஸ்தான் இருந்தது. உலகளவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 11,072 பயங்கரவாதத் தாக்குதல்களில் 927 தாக்குதல் கள் இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டவை. அந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 16 விழுக்காடு அதி கம். அத்துடன், தாக்குதலில் உயி ரிழந்தோரின் எண்ணிக்கையும் 17 விழுக்காடு அதிகரித்தது. 2015ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை 289ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 337 ஆனதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல தாக்குதலில் காய மடைந்தோரின் எண்ணிக்கை 500லிருந்து 636ஆக அதிகரித்து விட்டது. இந்தியாவின் நிலைமை இவ் வாறிருக்க, பாகிஸ்தான் நிலைமை அதற்கு நேர்மாறாகச் சென்றுள் ளது. பாகிஸ்தானில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல் எண்ணிக்கை 1,010ஆக இருந்த நிலையில் கடந் தாண்டு அந்த எண்ணிக்கை 27% குறைந்து 734 ஆனது. இருப்பினும், இந்த இரு நாடு களின் நிலவரத்தை ஒப்பிடு கையில் தாக்குதல் சம்பவங் களுக்கு இடையில் முக்கிய வேறுபாடுகள் இருப்பது கவனித் தக்கது என்று அமெரிக்க பகுப் பாய்வு தகவல் குறிப்பிடுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon