புதிதாக ஹெச்ஐவி கிருமி தொற்றிய நாடுகளின் பட்டியலில் மலேசியா, இந்தியா

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் கடந்தாண்டு புதிதாக ஹெச்ஐவி கிருமி தொற்றிய பத்து ஆசிய நாடுகளின் பட்டியலில் மலேசியா வும் இந்தியாவும் இடம் பிடித்துள் ளன. இவ்வட்டாரத்தின் 95 விழுக் காடு புதிய ஹெச்ஐவி கிருமி இந்த பத்து நாடுகளில்தான் பரவி யதாக அண்மையில் வெளியிடப் பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. மலேசியா, இந்தியா, சீனா, இந்தோனீசியா, பாகிஸ்தான், வியட்னாம், மியன்மார், பாப்புவா நியூ கினி, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகியன அவை. ஹெச்ஐவி அல்லது எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கான ஐநாவின் இணைத் திட்டம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து புதிய தொற்றுகள் குறைந்து வரு வதாகக் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆண்டில் 310,000 புதிய கிருமித் தொற்றுகள் பரவிய நிலையில் கடந்த ஆண்டு அந்த எண் ணிக்கை 270,000ஆக இருந்த தென அது கூறுகிறது.

உலகம் முழுவதும் ஹெச்ஐவி கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள 36.7 மில்லியன் பேரில் 19.5 மில்லியன் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். வரும் 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 30 மில் லியனாக அதிகரிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon