கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சதியே காரணம்: எம்எல்ஏ வின்சென்ட்

திருவனந்தபுரம்: 51 வயது பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஜூலை 22, 2017 சனிக்கிழமை அன்று கேரள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.வின் சென்ட் கேரள காவல் துறையினரால் கைது செய்யப் பட்டார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் கைது செய்யப்பட்டது ஓர் அரசியல் சதி என்றும் இதற்குப் பின்னணியில் முதல்வர் பினராய் உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் எம்.வின்சென்ட் கூறி யுள்ளார். இந்தப் பொய்க் குற் றச்சாட்டுக்காக நான் ஒருபோதும் பதவியில் இருந்து விலக மாட் டேன் என்று அவர் கூறியுள்ளார். முதல்வர் கொடுத்த அழுத்தத்தி னால்தான் காவல் துறையினர் தம்மைக் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கஞ்சேரி பாலியல் வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் மீது பெண் ஒருவர் பாலி யல் புகார் கொடுத்தும் அவர் கைது செய்யப்படாததைச் சுட்டிக் காட்டினார் வின்சென்ட்.

கேபிசிசி கட்சியின் தலைவர் எம்எம் ஹசன் கூறுகையில், வின்சென்ட் கைதுசெய்யப்பட்டது அரசியல் நோக்கமுடையது. நீதிமன்றத்தில் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். காங்கிரசின் மூத்த தலைவர் களில் ஒருவரான ரமேஷ் சென் னிதலா கூறுகையில், “இந்தக் கைது நடவடிக்கை வழக்கத்திற்கு மாறான ஒன்று, இது குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி நாளை விவாதிக்க உள்ளது,” எனத் தெரிவித்தார். தாம் கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் வின்சென்ட், முன்னதாகவே முன்பிணை கோரி விண்ணப்பித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் புகாரின்பேரில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட கேரள சட்டமன்ற உறுப்பினர் எம். வின்சென்ட். படம்: ஊடகம்